நக்ஷபந்தி ஹக்கானி ரப்பானி இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்!

தொடக்கமாக, சபிக்கப்பட்ட ஷைத்தானின் தந்திரங்கள் மற்றும் சூழ்ச்சிவலைகளிலிருந்து எங்கள் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறோம். அவன், மனிதனை நிரந்தர இழிவின் பால் இழுப்பதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துள்ள ஜீவன்.

தொடர்ந்து, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் – அளவற்ற அருளாளனும் நிரகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமம் ஓதி முன்னேறுகிறோம். நிகரற்ற அன்புடையோன் சையிதினா முஹம்மதை (ஸல்) மனிதகுலத்துக்கு ஓர் அருட்கொடையாக அனுப்பியுள்ளான். எங்கள் அன்பிற்குரிய அந்த நபிகளாருக்கு (ஸல்) – அவரது இறைவனால் நேசிக்கப்படும் ஹபீபுல்லாஹ்வுக்கு – எங்களது நேசம், சலாம் மற்றும் ஸலவாத்துகளை அனுப்புகிறோம்.

வழிதேடி வந்தவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். வபரகா.

நீங்கள் தற்செயலாக இந்த இணையதளத்துக்கு வரவில்லை. ஆம், இந்தப் பேருலகில் எதுவும் தற்செயலாகவோ காரணமின்றியோ நிகழ்வதில்லை. அனைத்து நிகழ்வுக்குள்ளும் அளவற்ற ஞானம் ஒளிந்துள்ளது – அது ஓர் அற்ப சம்பவமாயினும் சரி. எளிய அட்டைப்பூச்சி கூட மனிதனுக்கு மிகப்பெரும் பலனை வழங்குகிறது.

நீங்கள் இங்கே வந்துள்ளதற்குக் காரணம், இந்த இணையதளத்துக்கு நீங்கள் வழிகாட்டப்படுவீர்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அவனது கரங்களின் துணையால் நித்தியப் பேரின்பத்திற்கு வழிகோலும் வாயிலுக்கு நீங்கள் வழிகாட்டப்படுவீர்கள் என்பதை வாக்குறுதிகளின் தினத்திலேயே –  நீங்கள் இந்த பூளோகத்தின் பால் அனுப்பப்படுவதற்கு வெகுகாலம் முன்பே – இறைவன் விதித்துவிட்டான்.

நீங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பயணங்கள் மேற்கொண்டு இங்கே வந்திருக்கிறீர்கள். ஆம், ‘அல்லாஹ்வை அடைவதற்கான வழிகள் பல்வேறுபட்டவை; மனித சுவாசங்களைக் காட்டிலும் அதிகமானவை’. இப்பொழுது நீங்கள் சுய கண்டறிதல் மற்றும் சுய உணர்தலின் வாசற்படியில் நின்றுகொண்டு இருக்கிறீர்கள்.

இந்தக் கட்டத்திலிருந்து, உங்களில் சிலர் சிறிதுகாலம் இங்கே களைப்பாறிவிட்டுச் சென்றுவிடுவீர்கள். அதன் தேனை சுவைக்காமலே, அதன் விளக்க ஓடைகளின் மதுவை அருந்தாமலே சென்றுவிடுவீர்கள். அத்தகு துர்பாக்கியவானை நாங்கள் வழியனுப்பி வைக்கிறோம். ஏனெனில், மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை. நீங்கள் பயிரிட்டவற்றைக் கொண்டே நீங்கள் அடக்கம் செய்யப்படுவீர்கள். வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) ஒருமுறை ரசூலுல்லாஹ்விடம் (ஸல்) கூறினார்கள்: முஹம்மதே, நீங்கள் விரும்பியபடி இவ்வுலகில் செயலாற்றிக் கொள்ளுங்கள். ஆனால், உங்கள் செயல்கள் யாவற்றுக்கும் கணக்குச் சொல்லவேண்டும் என்பது நினைவில் இருக்கட்டும். முஹம்மதே, நீங்கள் விரும்பியபடி இவ்வுலகில் வாழ்ந்துகொள்ளுங்கள். ஆனால், ஒருநாள் நீங்கள் மரணத்தைச் சுவைக்கவேண்டும் என்பது நினைவில் இருக்கட்டும். முஹம்மதே, நீங்கள் விரும்பிய மனிதரை இவ்வாழ்க்கையில் நேசித்துக்கொள்ளுங்கள். ஆனால், ஒருநாள் மரணிக்கும்போது உங்கள் நேசத்துக்குரியவர் உங்களைவிட்டுப் பிரிந்துவிடுவார் என்பது நினைவில் இருக்கட்டும்.” ஆக, வழிதேடிவந்த அன்பர்களே, உங்கள் விருப்பப்படி நீங்கள் செல்லலாம்.

ஆயினும் சிலர் தங்கள் கால்விரல்களை இந்த அழைக்கும் ஓடைகளில் நனைப்பார்கள். அதையடுத்து, விளங்கமுடியாத விதத்தில் ஆழ் நீருக்குள் இழுத்துச் செல்லப்படுவார்கள். இந்த ஆபத்தான பயணத்தில் இறங்குவதிலிருந்து உங்களை திசைதிருப்பும் அகந்தை மற்றும் ஆசைகளுடன் நீங்கள் போராடிக்கொண்டிருக்க, அச்சமோ கட்டுப்பாடோ இன்றி உங்களையே வீசியெறிவீர்கள். நீங்கள் கடக்கவேண்டிய அந்த பொங்கும் பெருவெள்ளத்திற்குள் செல்வீர்கள். நீண்ட பயணத்திற்குப் பின்பு இறுதியாக, நதி சமுத்திரத்தைச் சந்திக்கும்போது, அலைகள் அடங்கிவிடும்; அமைதி தவழ்ந்துவரும்; சங்கமிக்கும் நீர்களின் சாந்தமான குரலொழிக்கு மத்தியில், அன்றொரு நாள் ‘நீ’ என்பதாக இருந்த நீர்த்துளி இப்போது மறைந்துவிடும். நதியும் மறைந்துவிடும். விசாலமான எல்லையற்ற சமுத்திரம் மட்டுமே நீடித்திருக்கும். அத்தகு அருள்பெற்ற மனிதரிடம் நாம் கூறுகிறோம்: “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே. அவனே தன் விசாலமான கருணையால், வழிதவறிவிட்ட ஒருவரைக் காப்பாற்றியுள்ளான்.” நித்திய சாந்தியின் பள்ளத்தாக்கு உங்களை வரவேற்கிறது.

வழிதேடி வந்தவரே! நீங்கள் உங்களைப் பற்றியும், நீங்கள் தற்போதுள்ள இடத்தைப் பற்றியும்,நீங்கள் சேரவேண்டிய தலத்தைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். வழிதேடி வந்தவரே! ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உங்களுக்கு உள்ளது. நீங்கள் இவ்வுலக வாழ்வைக் கடந்துவிட்டால், அதன் பிறகு ஒருபோதும் இவ்வழியில் செல்லமாட்டீர்கள்.

இந்தப் பயணம் பேரானந்தம் மிக்கது. இது சென்றடையும் இடம் வர்ணனையற்றது. ஆம், தேனின் சுவையை, தாலாட்டின் உணர்ச்சியை, அன்பின் துடிப்பை எப்படி விளக்கிச்சொல்ல முடியும்?

வழிதேடி வந்தவரே! இந்த இணையதளத்தினுள் இருக்கும் சுஹ்பாக்களில் குடிகொண்டுள்ள ஞான நீரை இறைத்துக்கொள்ள உங்களை வரவேற்கிறோம். எங்களது அன்பு ஆசான் மௌலானா ஷெய்கு முஹம்மது நாஸிம் அல்-ஹக்கானி அல்-ஆதில் அல்-கிப்ரீஸி – நக்ஷபந்தி தரீக்கத் வழியமைப்பின் 40 -ம் மஹா ஷெய்கு – அவர்களிடமிருந்து ஊற்றெடுத்து ஓடும் ஞானவெளிச்சத்திலிருந்து இறைத்துக்கொள்ளுங்கள். இந்தப் போதனைகள் யாவும் அன்பில் மூழ்கிய ஓர் இதயத்திலிருந்து புறப்படுகின்றன. அகந்தை அகன்று, தடுக்கவியலாத ஒரே ஜீவனிடம் முழுமையாகச் சரணடைந்துவிட்ட ஓர் இதயத்திலிருந்து வருகின்றன.

மௌலானா உங்களை தன்னை நோக்கியோ இந்தத் தரீக்கத்தை நோக்கியோ அழைப்பதில்லை. மாறாக, இந்த அருஞ்சுவைப் பயணத்தில்; அன்புப் பயணத்தில் தன்னுடன் இணைந்துகொள்ளுமாறு உங்களை அழைக்கின்றார்.

அவரது கரத்தைப் பற்றுங்கள். அன்பைச் சுவைக்கத் தொடங்குங்கள். அவரது அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இந்த இணைப்புகள் இறைவனை நோக்கிய உங்களின் பயணித்திறக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கட்டும்:

ஷெய்கு நசீம் என்பவர் யார்?

சுஹ்பாஹ் என்பது என்ன?

இந்த இணையதளம் உங்களுக்கு எவ்வாறு உதவுக்கூடும்?

இந்த இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

நீங்கள் எங்களுக்கு எவ்வாறு உதவலாம்.

மௌலானா ஷெய்கு நசீம்இன் சுஹ்பாஹ்-வின் மாதிரிக்குள் செல்லவும்.

உங்கள் பயணம் இனிதாகத் துவங்கட்டும்!

உங்களுக்கு இந்த இணையத்தை எவ்வாறு உபயோகிப்பது என்று தெரியவில்லை என்றாலோ அல்லது ஏதேனும் உதவி தேவைப்பட்டாளோ, admin@SufiHub.com என்ற மின்னஞ்சல் மூலமாக நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது ட்விட்டர்(SufiHub), ஸ்கைப் (SufiHub), அல்லது ஃபேஸ்புக் (SufiHub), உடன் நீங்கள் எங்களைப் பின்தொடரலாம்/எங்களுடன் பேசலாம். நீங்கள் +65 8200 9955 என்ற எண்ணிற்கு, நீங்கள் வாசக செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம். எனவே எங்களுடன் இணைந்திருங்கள்!

மௌலானாவின் முந்தைய வீடியோக்களைக் காண, பின்வரும் இணைப்பை சொடுக்கவும்:

இந்த இணையதளத்தில் உறுப்பினராக பதிவு செய்யவும், அதன்மூலம் ஒவ்வொரு முறை புதிய பதிப்புகள் வெளிவரும் பொழுதும் உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துவோம். நீங்கள் எங்களை ட்விட்டரிலும் பின்தொடரலாம், நாங்கள் SufiHub.

இந்த இணையதளத்தில் இருந்து, கட்டுரைகளை மறுஆக்கம் செய்ய, தயவு செய்து சுஃபி ஹப்பின் ஒப்புதலைப் பெறவும். சுஹ்பாஹ்-வின் தொகுப்புகளை மறுபதிப்பு (ஒப்புதல் பெற்ற பிறகுசெய்யும் பொழுது, முழுமையாக மறுஆக்கம் செய்யவேண்டும், மற்றும் அவைகளின் ஆதாரவளத்தைக் குறிப்பிடவேண்டும். இந்த இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள எந்த ஒரு பகுதியும் ஏதேனும் வர்த்தகக் காரணங்களுக்காகவோ அல்லது அனுமதியின்றியோ உபயோகிக்க கூடாது.

அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.